கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

பரபரப்பு;

Update: 2025-06-10 03:35 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அடுத்த சித்தலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன், 50; தனது குடும்பத்தினருடன் மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தவர், திடீரென தன் மீது பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. உடன் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சுப்ரமணியனை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தி, மனு அளித்து விட்டுச் செல்லும்படி அறிவுறுத்தினர்.அதன்படி அவர் அளித்த மனு விபரம்: எனக்கு சொந்தமான 25 சென்ட் நிலத்தினை வேறொருவர் பட்டா மாற்றம் செய்துள்ளார். இதனை சரிசெய்து, பட்டா மாற்றம் செய்து தரக்கோரி கீழ்பூண்டி வி.ஏ.ஓ., விடம் கூறியும், தீர்வு காணாமல் அழைக்கழிப்பு செய்து வருகிறார். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Similar News