அடையாளம் தெரியாத முதியவர் போலீஸ் ஸ்டேஷன் அருகே வடிகாலில் விழுந்து பலி
அடையாளம் தெரியாத முதியவர் குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே வடிகாலில் விழுந்து பலியானார்.;
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள வடிகாலில் சுமார் 60 வயது முதியவர் சடலம் கிடப்பதாக பொதுமக்களால் அறிந்து, தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் (பொ) தண்டபாணி தலைமையில் வந்த மீட்பு படையினர், வடிகாலில் இறங்கி, சடலத்தை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பிரேதத்தை குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கில் வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை செய்து வருகின்றனர்.