ஜல்லி, எம் சாண்ட், பி சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை கனிம சேமிப்பு கிடங்கிலிருந்து எடுத்து செல்ல இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
பெரம்பலூர் மாவட்டத்தில், ஜல்லி, எம் சாண்ட், பி சாண்ட் உள்ளிட்ட அனைத்து வகை கனிமங்களையும் கனிம சேமிப்பு கிடங்கிலிருந்து எடுத்துச் செல்வதற்கு www.mimas.in.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்து உரிய நடைச்சீட்டுடன் (Transit pass) எடுத்துச் செல்லப்பட வேண்டும்;
பெரம்பலூர் மாவட்டம் ஜல்லி, எம் சாண்ட், பி சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை கனிம சேமிப்பு கிடங்கிலிருந்து எடுத்து செல்ல இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பெரம்பலூர் மாவட்டத்தில், ஜல்லி, எம் சாண்ட், பி சாண்ட் உள்ளிட்ட அனைத்து வகை கனிமங்களையும் கனிம சேமிப்பு கிடங்கிலிருந்து எடுத்துச் செல்வதற்கு www.mimas.in.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்து உரிய நடைச்சீட்டுடன் (Transit pass) எடுத்துச் செல்லப்பட வேண்டும். குவாரி மற்றும் சுரங்கங்களிலிருந்து எடுத்துச் செல்லப்படும் கனிமங்களை வரன்முறைப்படுத்துவதற்கு ஏதுவாக, இணையவழியில் (Bulk-Permit) வழங்கும் நடைமுறை செப்டம்பர் 2024 முதலும் மற்றும் (e-Permit) வழங்கும் நடைமுறை பிப்ரவரி 2025 முதல் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது பெரம்பலூர் மாவட்டத்தில், அனைத்து வகை கனிமங்களையும் கனிம சேமிப்பு கிடங்கிலிருந்து எடுத்து செல்வதற்கு வழங்கப்படும் மாற்று நடைச்சீட்டுகளை இணைய வழி வாயிலாக வழங்கும் நடைமுறை 12.06.2025 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே கனிம குத்தகைதாரர்கள் மற்றும் கனிம சேமிப்பு கிடங்கு உரிமையாளர்கள் அனைவரும் www.mimas.in.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து மாற்று நடைச்சீட்டுடன் (Transit pass) பெற்று ஜல்லி, எம் சாண்ட், பி சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை சேமிப்பு கிடங்களிலிருந்து எடுத்துச் சென்று பயன்படுத்துமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.