அரியலூர் கூட்டுறவு நகர வங்கி புதிய கட்டடத்துக்கு பூமி பூஜை
அரியலூர் கூட்டுறவு நகர வங்கி புதிய கட்டடத்துக்கு பூமி பூஜை நடைபெற்றது.;
அரியலூர், ஜூன் 14- அரியலூர் பெருமாள் கோயில் தெருவிலுள்ள கூட்டுறவு நகர வங்கிக்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடத்துக்கான பூமி பூஜை நடத்தப்பட்டது. ஏற்கனவே இந்த வங்கி செயல்பட்டு கட்டடம் மிகவும் பழமை வாய்ந்தது. இதையடுத்து அவ்வளாகத்திலேயே புதிய கட்டடம் கட்டுவதற்கு முடிவெடுக்கப்பட்டு, அதற்கான பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது. கூட்டுறவு சார்பதிவாளர் இளஞ்செழியன் தலைமை வகித்து, பூமி பூஜையை நடத்தி வைத்து, கட்டுமானப் பணிகளை தொடக்கி வைத்தார்.செயலாட்சியரும், முதுநிலை ஆய்வாளருமான எஸ்.பாலுமகேந்திரன், முன்னாள் தலைவர் சீனி.பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலாளர்கள் எஸ்.கந்தசாமி,எஸ்.சுமதி, உதவியாளர் பி.மணிவாசகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். :