அரியலூரில் எழுச்சியுடன் தொடங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடை பயண இயக்கம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் பங்கேற்பு.
அரியலூரில் எழுச்சியுடன் தொடங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் சந்திப்பு நடை பயண இயக்கத்தை மாநில குழு உறுப்பினர் ஐ வி நாகராஜன் தொடங்கி வைத்து மக்களின் வாழ்வாதார கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.;
அரியலூர், ஜூன்.14- அரியலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து எழுச்சியோடு மாபெரும் மக்கள் சந்திப்பு நடை பயண இயக்கம் ஜூன் 14 ஆம் தேதி அரியலூர் அண்ணாசிலையில் தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று அரியலூர் தேரடிக்கு வந்து முடிவடைந்தது. நடை பயணத்திற்கு அரியலூர் ஒன்றிய செயலாளர் அ.அருண்பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர்கள் செ.மலர்க்கொடி, கே.குணா, கு.சுப்பிரமணியன், சே.பாக்கியம், ரா.தனலட்சுமி, க.கந்தன்,ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். நடை பயணத்தில் சிபிஎம் கட்சி மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும், மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்தும், கண்டனம் தெரிவித்தும் பேசினர்..தொடர்ந்து நடைபெற்ற நடை பயணத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.துரைசாமி, துரை.அருணன், டி.அம்பிகா, கே.கிருஷ்ணன், மூத்த நிர்வாகி ஆர்.சிற்றம்பலம், தா.பழூர் ஒன்றிய செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாவட்ட குழு பி பத்மாவதி மற்றும் சி.ஆதிலட்சுமி, ர.சந்திரா, ஜோ.துர்கா மற்றும் ரவீந்திரன் உள்ளிட்ட மாவட்ட குழு உறுப்பினர்கள் செந்தொண்டர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற நடை பயணத்தில் மாவட்ட தலைநகர் அரியலூர் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், வரைமுறை இல்லாமல் உயர்த்தப்பட்ட நகராட்சி சொத்து வரி, குடிநீர் கட்டண உள்ளிட்ட வரி இனங்களை திரும்ப பெற வேண்டும், அரியலூர் நகரில் அனைத்து பகுதிகளிலும் சாலைகளை சீரமைத்து மாவட்ட தலைநகருக்கான அந்தஸ்தை உயர்த்த வேண்டும், நீதிமன்ற உத்தரவு நீர்நிலை ஆக்கிரமிப்பு என்று கூறி வீடுகளை எடுக்கும் போக்கை நிறுத்த வேண்டும், இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று இடமும் வீடும் கட்டிக் கொடுத்து அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும், உள்ளூர் இளைஞர்களுக்கு இங்கு உள்ள சிமெண்ட் ஆலைகளில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும், நிலமற்ற வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட வேண்டும், அரியலூர் நகரில் முக்கிய இடங்களில் இலவச கழிப்பறை மற்றும் வாகனம் நிறுத்தத்திற்கான இடம் வசதி ஏற்படுத்த வேண்டும், அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டுமான பணிகளை துவங்க வேண்டும், வாகன நெரிசலை தவிர்த்திட ஆம்புலன்ஸ் சென்றிட ஏதுவாக கட்டிட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், அரியலூர் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடித்து வாகன நெரிசலை தவிர்க்க வேண்டும், அரியலூர் நகரில் தொடர் வாகன திருட்டு மற்றும் பணம் நகை திருட்டை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுபான கடையை அகற்ற வேண்டும், ஆதார் ரேசன் அட்டை பதிவு மற்றும் திருத்தம் போன்ற ஆன்லைன் சேவைகளுக்கு பணம் வாங்கக்கூடாது, மேலும்.மக்களை அலைக்கழிக்காமல் சேவைகளை எளிமையாக்க வேண்டும், அரியலூர் செட்டி ஏரி பூங்கா, இருசு குட்டை பூங்காவை தரம் உயர்த்தி மின் விளக்குகள் ஒளிர்வதை உறுதிப்படுத்த வேண்டும், மருத்துவ கல்லூரி மருத்துவமனையை தரம் உயர்த்தி அனைத்து மருந்துகளும் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள் அனைவருக்கும் பென்ஷன் தொகை ரூபாய் 3000 உயர்த்தி வழங்க வேண்டும், கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை அரியலூரில் அனைத்து பகுதிகளுக்கும் விரிவு படுத்த வேண்டும், குடிநீர், மின் கட்டண வரி வசூலை தனியாரிடம் ஒப்படைக்கும் போக்கை கைவிட வேண்டும், ரயில் நிலையத்தில் பயணிகளை ஏற்றி விட, அழைத்து வர செல்லும் இருசக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் போக்கை கைவிட வேண்டும், கழிப்பறை பயன்படுத்த கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடை பயணம் மேற்கொள்ளப்பட்டது. .