பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
1200 க்கும் மேற்பட்ட வழக்குகள் தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் வழக்காடிகள், எதிர் வழக்காடிகள் வரவழைத்து இரு தரப்பு வழக்கறிஞர்கள் முன்னிலையில் பேசி 454 வழக்குகள் முடிவற்றது.;
புதுடெல்லி தேசிய மக்கள் நீதிமன்றம் வழிகாட்டுதலின் படியும். தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தாவின்படியும் பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஆலோசனையின்படி பெரம்பலூர் DEL சட்டப்பணிகch ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமாகிய P.இந்திராணி முதன்மை மாவட்ட நீதிபதி (பொறுப்பு) அவர்கள் தவைமையில் ஒரு குழுவும், பெரம்பலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சங்கர் தலைமையில் ஒரு குழுவாகவும் மற்றும் வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி, குற்றவியல் நீதித்துறை நடுவரும்மாகிய ராஜசேகரன் தலைமையில் எற்பாடு செய்யபட்டு இதில் பெரம்பலூர் மாவட்ட உரிமையியல் நீதிபதி செல்விதன்யா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி தினேஷ் கூடுதல் மகிள நீதிமன்ற நீதித்துறை நடுவர் ரேஷ்மா இவர்களை உறுப்பினர்களாக சேர்த்து, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்.1 பிரேம்குமார் அவர்களையும், குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்.2 செல்வி.கவிதா ஆகியோர்களை குற்றவியல் வழக்குகளுக்கு நியமனம் செய்யபட்டு தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் பெரம்பலூர். வேப்பந்தட்டை குன்னம் உட்பட அனைத்து நீதிமன்றங்களில் உள்ள வருவாய்துறை. மோட்டார் வாகன விபத்து வழக்குகள், வங்கி வாரக்கடன் வழக்குகள் உட்பட சுமார் 1200 க்கும் மேற்பட்ட வழக்குகள் தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் வழக்காடிகள், எதிர் வழக்காடிகள் வரவழைத்து இரு தரப்பு வழக்கறிஞர்கள் முன்னிலையில் பேசி 454 வழக்குகள் முடிவற்றது. மோட்டார் வாகன விபத்து, காசோலை மோசடி வழக்குகள் மற்றும் வங்கி வாராக்கடன் வழக்குகள் உட்பட இழப்பீட்டுத் தொகை ரூ.4.82,40,526 உத்தரவிற்கான ஆணை தேசிய மக்கள் நீதிமன்றம் முன்பாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதியுமாகிய (பொறுப்பு) இந்திராணி அவர்களால் வழங்கப்பட்டது. இதில் வழக்கறிஞர்களும். வழக்காடிகளும், எதிர் வழக்காடிகளும் மற்றும் நீதிமன்ற ஊழியர்களும் கலந்து கொண்டனர். தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும், பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயளரும், சார்பு நீதிபதியும்மாகிய A.சரண்யா செய்திருந்தார்.