உலக இரத்தக்கொடையாளர் தினம்*
சாதி, மத, இன்ன பிற வேறுபாடுகளையெல்லாம் களைந்து அனைவருக்கும் குருதிதானம் வழங்கி அனைத்து மக்களின் உயிர்களை காப்பாற்றவும், அமைதியும் அரவணைப்பையும் இந்த மண்ணில் நிலைநாட்டவும் வேண்டுமென இரத்ததான சேவையாளர்களை கௌரவிக்கும் வகையில் ஜூன் 14 அன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது;
உலக இரத்தக்கொடையாளர் தினம் சாதி, மத, இன்ன பிற வேறுபாடுகளையெல்லாம் களைந்து அனைவருக்கும் குருதிதானம் வழங்கி அனைத்து மக்களின் உயிர்களை காப்பாற்றவும், அமைதியும் அரவணைப்பையும் இந்த மண்ணில் நிலைநாட்டவும் வேண்டுமென இரத்ததான சேவையாளர்களை கௌரவிக்கும் வகையில் ஜூன் 14 அன்று உலகம் முழுவதும் இரத்த கொடையாளர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் இரத்த வகைகளை கண்டுபிடித்த AB0 என்று வகைப்படுத்திய கார்ல் லாண்ட்ஸ்டெய்னை நாம் நினைவு கூற கடமைப்பட்டிருக்கின்றோம். இந்தியாவில் ஆண்டுக்கு 5 கோடி யூனிட் இரத்தம் தேவைப்படுகிறது. ஆனால் கிடைக்கக்கூடிய இரத்தமோ 2.5 கோடி தான் , நாள் ஒன்றுக்கு 38 ஆயிரம் யூனிட் இரத்தம் தேவைப்படுகிறது. ஆனால் அந்த அளவுக்கு இரத்ததானம் செய்வதற்கு இந்தியர்கள் முன்வருவதில்லை என்பது தான் எதார்த்தமான நிலை. ஒரு முறை ஒரு யூனிட் நீங்கள் இரத்ததானம் செய்தால் அது ஒரு உயிரை அல்ல மூன்று உயிரை காப்பாற்றுகின்றது அப்படி என்றால் இந்த இரத்ததானத்துடைய முக்கியத்துவத்தை நாம் தெளிவாக உணர முடியும். அதுமட்டுமல்ல இந்த இரத்ததானம் செய்பவர்களுக்கு ஏற்படும் நன்மைகளானது உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது, நமக்கு கலோரிகளை குறைப்பதற்கு உதவுகிறது, நல்ல உடல்நிலையுடன் சீராக வாழ்வதற்கு அது உதவி செய்கிறது. ஆண்டுக்கு நான்கு முறை நாம் இரத்ததானம் செய்யலாம். அனைவருக்கும் இரத்ததானத்தை கடந்த காலங்களிலே நம்முடைய குருதி கொடையாளர்கள் அளித்து வந்திருக்கின்றார்கள் அந்த சேவை தொடர வேண்டும் , குருதிதானம் வழங்குவோம், உயிர்களை காப்பாற்றுவோம். இரத்த வகைகளை கண்டறிந்த கார்ல் லேண்ட்ஸ்டெய்ரிங் பிறந்த தினமான சூன்-14 ஆம் தேதி ஐ.நா சபையின் உலக சுகாதார அமைப்பால் ஒவ்வொரு ஆண்டும் உலக இரத்ததான தினமாக கடைபிடிக்கப் படுகிறது. இத்தினத்தையொட்டி பெரம்பலூர் பிரியம் மருத்துவமனையில் மருத்துவர்.செ.விவேக் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி சூன்-14 இன்று உலக இரத்த தான தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மருத்துவமனை நிர்வாக இயக்குநர் திருமதி.மணிமாலா விவேக் அவர்கள் தலைமை வகித்தார். பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் அறக்கட்டளை தலைவரும், ஓய்வு பெற்ற கல்வி அலுவலருமாகிய நா.ஜெயராமன் அவர்கள் முன்னிலை வகித்தார். மணிலா விவேக் அவர்கள் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களிடையே இரத்தம் கொடை வழங்க வேண்டிய அவசியம் குறித்து பேசி வீட்டிற்கு ஒரு குருதி கொடையாளர் உருவாக முன் வர வேண்டும் என பேசினார். மேலும் பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் அறக்கட்டளையில் அதிக முறை அதாவது 73 முறை இரத்தம் கொடை வழங்கிய க.மகேஸ்குமரன் அவர்கள் உட்பட உதிரம் நண்பர்கள் அறக்கட்டளையில் பயணிக்கும் குருதி கொடையாளர்கள் அனைவரையும் பாராட்டி வாழ்த்தினார். மேலும் சூன் -14 இரத்த தான தினத்தில் பிறந்த நாள் காணும் உதிரம் நண்பர்கள் குழு செயலாளரும், குருதி ஏற்பாட்டாளருமாகிய உதிரம் நாகராஜ் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உதிரம் நண்பர்கள் குழுவின் குருதி கொடையாளர் செங்குணம் குமார் அய்யாவு, பிரியம் மருத்துவமனை நிர்வாக அதிகாரி செல்வம், மேற்பார்வையாளர் குமார் மற்றும் செவிலியர்கள் ,ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.