தேசிய அளவிலான கேரம் போட்டியில் மாணவர் சாதனை சர்வதேச போட்டிக்கு தேர்வு

தேசிய அளவிலான கேரம் போட்டியில் குமாரபாளையம் மாணவர் வெற்றி பெற்று, சர்வதேச போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.;

Update: 2025-06-15 12:57 GMT
குமாரபாளையம் ஜே.கே.கே. சம்பூரணியம்மாள் மருந்தாளுனர் கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர் யோகேஷ், கோவாவில் நடந்த தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் கேரம் போட்டியில் இரட்டையர் பிரிவில் இரண்டாமிடமும், ஒற்றையர் பிரிவில் முதலிடமும் பெற்று சாதனை படைத்தார். இதனால் ஜூலை 23 முதல் 29 வரை நடைபெறவுள்ள சர்வதேச போட்டிக்கு தேர்வாகியுள்ளார். சாதனை படைத்த மாணவன் யோகேஷ்க்கு தாளாளர் வசந்தகுமாரி, நிர்வாக இயக்குனர் ஜெயபிரகாஷ், கல்லூரி முதல்வர் செந்தில்குமார் உள்ளிட்ட பேராசிரிய பெருமக்கள், மாணவ, மாணவியர் பாராட்டினார்கள்.

Similar News