தேசிய திறனறிவு தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவி தலைமை ஆசிரியருடன் விமானத்தில் பயணம் செய்தார்.
தேசிய திறனறிவு தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவி தலைமை ஆசிரியருடன் விமானத்தில் பயணம் செய்தார்;
அரியலூர், ஜூன்.17- அரியலூர்-தேசிய திறனறிவு தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவி தலைமை ஆசிரியருடன் விமானத்தில் பயணம் செய்தார் ஒவ்வொரு ஆண்டும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு தேசிய திறனறிவு தேர்வு நாடு முழுவதும் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு மாதம் ரூ ஆயிரம் வழங்கி வருகிறது. இந்நிலையில் இவ்வாண்டுக்கானதேசிய திறனறிவுத் தேர்வு ஜெயங்கொண்டம் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கடந்த பிப்ரவரி 22 ம் தேதி அன்று சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேசிய திறனறித் தேர்வு எழுதினர். அதில் வானவநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 25 பேர் தேசிய திறனறிவுத் தேர்வு எழுதியதில் மாணவி ஷர்மிளா தேர்ச்சி பெற்றார். தலைமை ஆசிரியர் அமுதா தேசிய திறனறிவு தேர்வில் வெற்றி பெற்றால் விமானத்தில் அழைத்துச் செல்வதாக மாணவர்களை ஊக்கப்படுத்தி இருந்தார். .அதன்படி வெற்றி பெற்ற மாணவி ஷர்மிளாவை கடந்த ஜுன் 14 ம் தேதி அன்று திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானத்திலும் சென்னையிலிருந்து விழுப்புரத்திற்கு வந்தே பாரத் ரயிலிலும் அழைத்துச் சென்று மாணவியை மகிழ்வித்தார் இதுபோல் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பாகவும் சில மாணவர்களை இதே தலைமை ஆசிரியர் விமானத்தில் அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.