கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

கன்னியாகுமரி;

Update: 2025-06-17 08:02 GMT
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் மனுக்களுடன் வந்திருந்தனர். அவர்களை போலீசார் சோதனை செய்த பிறகு உள்ளே அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் மூதாட்டி ஒருவர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதனை கவனித்து அவர் மீது தண்ணீரை ஊற்றி தற்கொலை முயற்சியை தடுத்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த தாணம்மாள் (வயது 70) என்பதும், அந்த பகுதியில் மீன் வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் அவரை அங்குள்ளவர் வியாபாரம் செய்யவிடாததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மூதாட்டி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News