மதிக்கொட்டான் ஓடையை சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கூட்டத்தில் தீர்மானம்

மதிக்கொட்டான் ஓடையை சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;

Update: 2025-06-17 14:17 GMT
அரியலூர்,ஜூன்.17- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்துவாஞ்சேரி கிளை கூட்டம் நடைபெற்றது. வேலுச்சாமி தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் உலகநாதன், அபிமன்னன் சுப்பிரமணி, தனசிங் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ரெங்கநாதன், பாண்டுரங்கன், பாலகிருஷ்ணன் தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டனர் கிளைச் செயலாளர் ரங்கநாதன் துணைச் செயலாளர் வேலுச்சாமி பொருளாளர் பாண்டுரங்கன் ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிதைந்து கிடக்கும் மதிக்கொட்டான் ஓடையை சீர் செய்து தண்ணீர் தேக்கி வைத்து விவசாய பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். முத்துவாஞ்சேரி கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும். மருதையாற்றில் குறுக்கே வைப்பூர் செல்லும் பாதையில் பாலம் அமைக்க வேண்டும் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தின் 40 பேர் 50 பேர் என்ற நிலையை மாற்றி நூறு நாள் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் நாள்தோறும் வேலை வழங்க வேண்டும், முழு சம்பளத்தையும் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். முத்துவாஞ்சேரில் பேருந்து வந்து செல்ல இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை புறம்போக்கை அகற்றி தர வேண்டும். உன்கிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர். இந்திய கம்யூனிஸ்ட் தா.பழூர் ஒன்றிய செயலாளர் முருகேஸ்வரி நன்றி கூறினார்.

Similar News