தூத்துக்குடி மாநகராட்சியில் கலந்தாய்வுக் கூட்டம்!
தூத்துக்குடி மாநகராட்சியில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.;
தூத்துக்குடி மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மேயர் பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மாநகர சுற்றுச்சூழல் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ஐஐடி யான சென்னை ஐஐடி, தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் தனியார் அமைப்பினருடன் இணைந்து எதிர்கால சந்ததியினருக்கு சமரசம் செய்யாமல் தற்போதைய சுற்றுச்சூழலை மேலும் பசுமையாக்கி அவர்களுக்கு வழங்கும் வண்ணமாகவும் ஏதேனும் ஒரு நிகழ்வால் எதிர்மறை விளைவை உண்டாக்கக் கூடியதும் மாநகர எல்லைக்குள் வெளியிடப்படும் மொத்த பசுமை இல்லா வாயுக்களின் அளவை குறைக்க நடவடிக்கை எடுக்கும் விதமாகவும் புதிய செயல் திட்டம் ஆரம்பமாக இருப்பதாக தெரிவித்தார். உடன் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா உட்பட பலர் கலந்து காெண்டனர்.