கடையநல்லூர் பேருந்து நிலைய நுழைவு வாயிலை சீரமைக்க கோரிக்கை
பேருந்து நிலைய நுழைவு வாயிலை சீரமைக்க கோரிக்கை;
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா தலைநகராகவும், சட்டமன்ற தொகுதி தலைமையகமாகவும் உள்ளது. இங்குள்ள பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. இதில் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் பேருந்து நிலைய நுழைவு வாயில் சேதமடைந்து காணபடுகிறது. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு இதனை சரி செய்து புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.