தா.பழூரில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, மக்கள் தொண்டர் க.சொ.கணேசன் திருவுருவ சிலைகளுக்கும் திமுக அலுவலகத்தில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கும் அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

தா.பழூரில் பெரியார் அண்ணா மக்கள் தொண்டர் க.சொ.கணேசன் திருவுருவ சிலைகளுக்கும் திமுக அலுவலகத்தில் உள்ள கலைஞரின் திரு உருவப்படத்திற்கும் கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.;

Update: 2025-06-18 14:11 GMT
அரியலூர், ஜூன்.18- ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில்,ஒன்றிய தி.மு.க அலுவலகம் எதிரில் அமைந்துள்ள, சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் முழு திருவுருவ சிலைக்கும்,தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா,மக்கள் தொண்டர் க.சொ.கணேசன் Ex.MLA ஆகியோரது முழு திருவுருவ வெண்கல சிலைக்கும் மாலை அணிவித்தும்,ஒன்றிய கழக அலுவலகத்தில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கும்,சட்டமன்ற உறுப்பினர், ஒன்றிய கழக செயலாளர் க.சொ.க.கண்ணன் அவர்கள் தலைமையில்,கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அவர்கள் மாலை அனுவித்து,மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் தா.பழூர் மத்திய ஒன்றிய கழக பொறுப்பாளர் இரா.அண்ணாதுரை, அவைத்தலைவர் எஸ்.சூசைராஜ், ஒன்றிய துணை செயலாளர்கள் இந்துமதி நடராஜன்,அ.இராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.ஆர்.தமிழ்ச்செல்வன், கோவி.சீனிவாசன்,சி.கண்ணதாசன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் ந.கார்த்திகைகுமரன்,த.சம்பந்தம்,த.குணசீலன்,அ.தங்கபிரகாசம், முனைவர் மு.முருகானந்தம்,க.நளராசன்,எழிலரசி அர்ச்சுனன், தா.பழூர் நகர செயலாளர் கண்ணன் மற்றும் கழக தோழர்கள் கலந்துகொண்டனர்.

Similar News