குமரி மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பத்மநாபபுரம் தொகுதிக்குட்பட்ட வேர்கிளம்பியில் நேறு நடைபெற்றது. நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர் மனோ தங்கராஜ் தலைமை வகித்தார். மாநில துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன் திமுக அரசின் சாதனைகளை அனைவரிடமும் எடுத்து கூறவும், பெண்கள் இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை கூறினார். கூட்டத்தில் மாவட்ட வைத்திய தலைவர் மரிய சிசுக்குமார் வரவேற்றார். மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பல்வேறு அணி நிர்வாகிகள் உட்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர்