கண்டமங்கலத்தில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது;
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், கண்டமங்கலம் மத்திய, தெற்கு, மேற்கு ஒன்றிய செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் மற்றும் கட்சி அலுவலகங்கள் திறப்பு விழா, அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தது.ஒன்றிய செயலாளர்கள் சீனுசெல்வரங்கம், செல்வமணி, பிரபாகரன் ஆகியோர் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு, கட்சி அலுவலகங்களை திறந்து வைத்தும், சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை மக்களுக்கு விநியோகம் செய்தார்.தொடர்ந்து செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது; தி.மு.க., அரசின் சாதனை திட்டங்களை மக்களிடையே கொண்டு சென்று, தேர்தல் பிரசார பணியை துவங்க வேண்டும். இந்தியாவிலேயே சிறப்பான ஆட்சியை நடத்தி, அனைத்து துறையிலும் தமிழகத்தை முன்னோடியாக கொண்டு செல்லும் முதல்வர் ஸ்டாலின், வரும் 2026 சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று, மீண்டும் முதல்வராக பதவி ஏற்க நாம் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என கூறினார்.