தென்காசியில் திருமலை கோயிலில் திருமணம் மண்டபம் கட்ட பூமி பூஜை
திருமலை கோயிலில் திருமணம் மண்டபம் கட்ட பூமி பூஜை;
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து இந்துசமய அறநிலையத்துறையின் சார்பில் பல்வேறு பணிகளுக்கு காணொளி காட்சி வாயிலாக நேற்று அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து நேற்று தென்காசி மாவட்டம் பண்ருடி, அருள்மிகு திருமலைக்குமரசுவாமி திருக்கோயிலில் ரூ. 282 இலட்சம் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜையில் மாவட்ட ஆட்சியர் ஏ. கே. கமல் கிஷோர் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் அருணாசலம் செட்டியார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.