ஆலங்குளத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்ற ஆட்சியர்
பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்ற ஆட்சியர்;
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏகே கமல் கிஷோர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும் ஆலங்குளம் அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏகே கமல் கிஷோர் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உள்பட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.