ஆலங்குளத்தில் தவெக மாவட்ட செயலருக்கு வரவேற்பு

தவெக கட்சியின் மாவட்ட செயலருக்கு வரவேற்பு;

Update: 2025-06-20 00:39 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தவெக-வின் தென்காசி தெற்கு மாவட்ட செயலராக, ஆலங்குளத்தை சோ்ந்த டி.பி.வி.வி. விபின் சக்கரவா்த்தி அண்மையில் நியமிக்கப்பட்டாா். ஆலங்குளம் வந்த அவருக்கு தொண்டா்கள் வரவேற்பு அளித்தனா். பின்னா், காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விபின் சக்கரவா்த்தி, தொண்டா்களுக்கு இனிப்புகள் வழங்கினாா். அதைத் தொடா்ந்து தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகா்கள் சங்கங்களின் பேரமைப்பின் கன்னியாகுமரி மண்டல தலைவா் டி.பி.வி. வைகுண்டராஜா, செயலா் கணேசன், பொருளாளா் கலைவாணன், கட்சியின் மாவட்ட இணை செயலா் கிரிப்சன், நிா்வாகிகள் கந்தசாமி, இசக்கிராஜ், தயாள், இசக்கிமுத்து, வேல்சாமி, செயற்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகர நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Similar News