தென்காசியில் சுகாதாரத் துறை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

சுகாதாரத் துறை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது;

Update: 2025-06-20 00:43 GMT
தென்காசி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், பொது சுகாதாரம்- நோய் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து, டெங்கு - யானைக்கால் நோய், புகையிலை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது, பொது சுகாதாரத் துறை துண்டறிக்கைகள் வழங்குவது, வாந்தி- வயிற்றுப்போக்கு ஏற்படாமலிருக்க குளோரினேஷன் செய்யப்பட்ட சீரான குடிநீா் விநியோகிப்பது உள்ளிட்டவை தொடா்பாக உள்ளாட்சி அமைப்புகள், பொது சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தினாா். மேலும், மாவட்டத்தில் உள்ள தனியாா் முதியோா் காப்பங்கள், விடுதிகளைத் தொடா்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தினாா். கூட்டத்தில், மாவட்ட சுகாதார அலுவலா் வி. கோவிந்தன், நலப் பணிகள் இணை இயக்குநா் பொ. கீதா கிருஷ்ணன், துணை இயக்குநா் தொழுநோய் மருத்துவா் அலா்சாந்தி, வட்டார- முதன்மை மருத்துவ அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள், நகராட்சி சுகாதார அலுவலா்கள் பங்கேற்றனா்.

Similar News