சங்கரன்கோவில் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீர் உயிரிழப்பு
விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீர் உயிரிழப்பு;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வாகைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் இவரது இரண்டரை வயது குழந்தை சர்வின் காட்சன் கேட்டு அருகே விளையாண்டு கொண்டிருந்தபோது திடீரென மயக்கம் அடைந்து விழுந்ததால் வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக 108 வாகனம் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் சர்வின் காட்சன் பரிசோதனை செய்துவிட்டு இறந்துவிட்டதாக கூறியதை எடுத்து உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. குழந்தையின் இறப்பு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து குருவிகுளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையின் மரணம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளதால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. வாகைகுளம் கிராமத்தில் 2 1/2 வயது குழந்தை திடீரென இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.