குடியிருக்க வீடுகள் இன்றி தவிக்கும் ஓலையூர் கிராம மக்கள் இலவச குடிமனை பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா?கிராம மக்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
ஆண்டிமடம் அருகே ஓலையூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தலித் மக்கள் சிபிஎம் கட்சி மாவட்ட செயலாளரிடம் குடிமனை பட்டா கோரி மனு அளித்தனர்.;
அரியலூர், ஜூன்.21- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே ஓலையூர் கிராமத்தில் தலித் மக்கள் 600 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இநநிலையில் இவர்கள் மூன்று முதல் நான்கு தலைமுறையாக உள்ள நிலையில் ஒவ்வொரு வீட்டிலும் மூன்று முதல் நான்கு குடும்பத்தினர் போதுமான இடமின்றி வசித்து வருகின்றனர்.ஏழ்மை நிலையில் உள்ள இவர்களுக்கு போதிய வசதி இல்லாத காரணத்தினாலும், இடத்தை வாங்கவே வீடு கட்டவோ வசதி இல்லாமல் சிரமத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றாத ஒன்றிய மாநில அரசுகளை கண்டித்து ஆண்டிமடம் ஒன்றியத்தில் நடைபயண மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தின் போது ஓலையூர் கிராம மக்கள் குறைகள் குறித்து கேட்டபோது சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தலித் குடும்பத்தினர் 3 முதல் 4 தலைமுறைகளாக நூறு குடும்பம் 600 குடும்பமாக உள்ள நிலையில் தற்பொழுது 100 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஒரே வீட்டில் மூன்று முதல் நான்கு குடும்பங்களாக வசித்து வருவதாகவும், உட்கார படுக்க இடம் இல்லாமல் சிரமத்திற்கு உள்ளாவதாகவும், இதுகுறித்து பலமுறை மனுக்கள் கொடுத்தும் இது நாள் வரை எந்த நடவடிக்கையும் இல்லை என கண்ணீர் மல்க அழுது அரசுக்கு கோரிக்கை வைத்து பேசினர். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இளங்கோவனிடம் முறையிட்டு தங்களுக்கு குடியிருக்க இலவச குடிமனை பட்டா பெற்றுத்தர கேட்டு அப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த 100 -க்கும் மேற்பட்ட பெண்கள் கோரிக்கை மனுவை அளிக்க வந்தனர் அவர்களை ஓரிடத்தில் அனைவரையும் அமர வைத்து சில கருத்துக்களையம், ஆறுதல்களையும் கூறி மாவட்ட செயலாளர் இளங்கோவன் மனுக்களை பெற்றுக் கொண்டு அதுசம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் இது பற்றி பேசி அதே பகுதியில் சர்வே எண் 183 - G ல் உள்ள 3 ஏக்கர் காலியாக உள்ள தரிசு நிலத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.ஏராளமான மக்கள் குடி கூடி மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்பட்டது..இதில் சிபிஎம் கட்சி வட்ட செயலாளர் எம்.வேல்முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.பரமசிவம், டி. அம்பிகா, மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆர்.இளவரசன், ஆர் செந்தில்வேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.