சென்னை, புறநகரில் வெளுத்து வாங்கிய திடீர் மழை - வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு திடீரென பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.;
சென்னையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்தாலும், தொடர்ந்து கடும் வெப்பம் நிலவி வருகிறது. லேசான மழையால் சிறிது வெப்பம் தணிந்தாலும் கூட அடுத்த நாளே மீண்டும் வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் கடும் சிரமம் அடைந்தனர். இந்த சூழலில் நேற்றிரவு சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்தது. கிண்டி, சைதாப்பேட்டை, மைலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளான பூந்தமல்லி, நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், மாங்காடு, போரூர், ஐயப்பந்தாங்கல் பகுதிகளிலும், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, அனகாபுத்தூர், பம்மல், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. இதனால், கடந்த சில தினங்களாக வெப்பம் அதிகரித்து வந்த நிலையில் நேற்று பெய்த திடீர் மழையால் சென்னையில் வெப்பம் தணிந்துள்ளது.