செங்கல்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை மாநாடு.
செங்கல்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை மாநாடு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கல்லாவி அடுத்த செங்கல்பட்டி கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு தோழர் சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய துணைச் செயலாளர் பூபதி கலந்து கொண்டு துவக்க உரையாற்றினார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் இராசேகர் கட்சியின் எதிர்கால கடமை குறித்தும் கிராமத்தில் குடிநீர் சாலை மற்றும் 100 நாள் வேலை உள்ளிட்ட பிரச்சினை குறித்தும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.