புளியங்குடி அருகே விபத்தில் திமுக பிரமுகா் பலி
விபத்தில் திமுக பிரமுகா் பலி;
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் கெங்கை அம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் லட்சுமணன் மகன் குட்டியப்பா(61). திமுக நிா்வாகி. இவரும் , அவரது உறவினரான வாசுதேவநல்லூா் கோடங்கி தெருவை சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் திருமலைக்குமாரும்(38) பைக்கில் புளியங்குடியில் இருந்து வாசுதேவநல்லூருக்கு சென்று கொண்டிருந்தபோது, மதுரையிலிருந்து குற்றாலம் சென்ற காா் ,பைக் மீது மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த இருவரும் புளியங்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு குட்டியப்பா இறந்தாா். இந்த சம்பவம் குறித்து, புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.