ஆலங்குளம் அருகே வீட்டிற்குள் பதுங்கிய உடும்பு பிடிபட்டது

வீட்டிற்குள் பதுங்கிய உடும்பு பிடிபட்டது;

Update: 2025-06-24 02:32 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கரும்பனூர் மேட்டுத்தெரு வைச் சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி (38). தனியார் பீடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவ ரது மனைவி சாந்தி (35). பீடி சுற்றும் தொழிலாளி. இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்த போது வித்தியாசமான உயிரினம் நடமாடுவதை பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்ச லிட்டார். அவரது அல றல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அவர்கள் ஆலங்குளம் தீயணைப் புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பே ரில் நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம் பவ இடத்துக்கு விரைந்து வந்து உடும்பை லாவக மாக பிடித்தனர். பின்னர் உடும்பை அருகில் உள்ள ராமர் கோயில் மலைப்ப குதியில் பாதுகாப்பாக விட்டனர்.

Similar News