நத்தக்காடையூர் அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதி சேர தொழிலாளி பாலி

நத்தக்காடையூர் அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதி சேர தொழிலாளி பாலி காங்கேயம் காவல்துறை விசாரணை;

Update: 2025-06-24 03:10 GMT
நத்தக்காடையூர் அருகே மருதுறை ஊராட்சி பறையகாட்டுவலசு கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். (வயது 49). சவர தொழிலாளி. மாற்றுத்திறனாளியான இவர் தனது 3 சக்கர ஸ்கூட்டரில் மருதுறை பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த கார் ஒன்று திடீரென்று ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த விபத் தில் பலத்த காயம் அடைந்த கணேசனை அக்கம் பக்கத் தில் உள்ளவர்கள் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற கணேசன் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கணேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். இது பற்றிய புகாரின் பேரில் காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், சப் இன்ஸ்பெக்டர் கபில்தேவ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News