தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை அவிநாசி பாளையம் காவல்துறையினர் விசாரணை;
பொங்கலூர் அலகுமலை சுப்பையகவுண்டம் பாளையத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மகன் சங்கர் (வயது 38). பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். இதுகுறித்து அவரது தாயார் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சங்கர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.