இறப்பிலும் இணைப்பிரியா கணவன், மனைவி - சங்கரன்கோவில் அருகே சோகம்
இறப்பிலும் இணைப்பிரியா கணவன், மனைவி - உயிரிழப்பு;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பூலியூர் வெங்கடசலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கணவன் மனைவி வேல்பாண்டி(65) - முத்தம்மாள் (63). கூலி வேலை செய்து வருகின்றனர் இவர்கள் வீட்டில் தனியாக வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளன. மூவருக்கும் திருமணம் முடித்து வைத்த நிலையில் மனைவி பிள்ளைகளோடு தனித்தனி வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் உடல் நலம் குன்றி காணப்பட்ட வேல்பாண்டி திடிரென நேற்று இரவு உயிரிழந்தார். இதனை அடுத்து உறவினர்கள் ஏராளமான அவரது துக்க நிகழ்வுகளுக்கு வந்து ஆறுதல் கூறிய நிலையில் திடீரென இன்று காலை 11 மணிக்கு கணவன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் மனைவி வேலம்மாள் உயிரிழந்தது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவர்கள் இருவரது உடலுக்கும் உறவினர்கள் மத்தியில் ஒரே நேரத்தில் இறுதி சடங்கு நடைபெற உள்ளது என தெரிவித்தனர்.