சங்கரன்கோவில் அருகில் டவர் மீது ஏறி இருவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு
டவர் மீது ஏறி இருவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால்;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் இவருடைய தகப்பனார் பரமசிவன். இந்த நிலையில் பாக்கியத்தாய் என்பவருடைய மாடுகளை அவிழ்த்து விட்டது தொடர்பாக காவல்துறையினர் பரமசிவன் மீது கரிவலம்வந்தநல்லூர் காவல் துறையினர் வழக்கு பதிந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஞ்சித் மற்றும் அவருடைய உறவினர் ராமச்சந்திரன் ஆகிய இருவரும் கரிவலம்வந்த நல்லூர் காவல் நிலையத்திற்கே சென்று அடாவடியில் ஈடுபட்டதில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தந்தை மீதும் தங்கள் மீதும் காவல்துறையினர் பொய் வழக்கு பதித்ததாக கூறியும் வழக்கு பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஞ்சித் தன்னுடைய உறவினர் ராமச்சந்திரன் சேர்ந்து பச்சேரி பகுதியில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்து வருகிறார். மேலும் செல்போன் டவர் மீது உள்ள இருவரும் மது போதையில் இருப்பதாக கூறப்படுகிறது சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் சம்பவ இடத்திற்கு காவல்துறை கண்காணிப்பாளர் வந்தால் மட்டுமே மேலிருந்து இறங்கப் போவதாக இருவரும் மிரட்டல் விடுத்த நிலையில் சம்பப்படத்திற்கு வந்த டிஎஸ்பி செங்குட்டு வளவன் பேச்சுவார்த்தை நடத்தியும் கீழே இறங்கியபாடில்லை. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது இந்த நிலையில் அவர்களை கீழே இறங்க சொல்லி அவர்களது உறவினரான ஒரு பெண்ணும் டவர் மீது ஏற முற்பட்ட நிலையில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தடுத்து நிறுத்தினர். செல்போன் டவர் மீது ஏறி இருந்த வாலிபர்களே போலீசார் பேச்சுவார்த்தைப் பின்பு கீழே இறக்கி போலீசார் வாகன மூலம் ஏற்றி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.