மருந்து கடையில் பணத்தை திருடியவர் கைது
மருந்து கடையில் பணத்தை திருடிய வரை பொதுமக்கள் துரத்தி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் காவல் துறை கைது செய்து விசாரணை;
வெள்ளகோவில் காங்கேயம் சாலையில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது அங்குள்ள மருந்து கடைக்கு அந்த வாலிபர் தூக்கு மாத்திரை கேட்டு உள்ளார் மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் கொடுக்க முடியாது என கடையில் இருந்தவர்கள் கூறியுள்ளனர் அப்போது திடீரென கல்லாவில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு வாலிபர் ஓடினார் உடனே அவரை பிடித்து வெள்ளகோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் விசாரணையில் அவர் கோவை ரத்தினபுரி சங்கனூர் சாலை கண்ணப்பன் நகரைச் சேர்ந்த அசோகன் மகன் அஜித்குமார் என்பதும் கோவை மாவட்டத்தில் பல்வேறு திருட்டு வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரிய வந்தது இதை எடுத்து காவல் உதவி ஆய்வாளர் மணிமுத்து ஏட்டு பாலகுரு ஆகியோர் வழக்கு பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர்