குண்டும் குழியுமான சாலை வாகன ஓட்டிகள் அவதி
எடைக்கல்பாடி ஊராட்சியில் குண்டும் குழியுமான சாலை வாகன ஓட்டிகள் அவதி;
மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எடைக்கல்பாடி ஊராட் சியில் இருந்து மூலனூர் வரும் பிரதான தார்ச்சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதடைந்து சரிசெய்யப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. இந்த கிராமத்தை சுற்றிலும் அதிக அளவில் தனியார் காற்றாலைகள் அமைக்கப்பட்டிருப்பதால் கனரக வாகனங்கள் அதிக அளவில் இச்சாலை வழியாக சென்று வருகிறது. குண்டும், குழியுமான சாலையால் இருசக்கர வாகனங்களில் செல்லும் விவசாயிகள், கூலித்தொழிலாளிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலையை சிரமைக்க வேண்டும் என்று அந்த பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.