தென்காசியில் பொதுமக்களுக்கு சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது

பொதுமக்களுக்கு சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது;

Update: 2025-06-26 01:26 GMT
தென்காசி மாவட்டம் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்களின் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களின் புகார்களை விரைந்து விசாரணை செய்திட சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

Similar News