மது போதையில் சாலை சென்ற வாகனங்களை மறித்து அட்ராசிட்டி செய்த இளைஞர்
மது போதையில் சாலை சென்ற வாகனங்களை மறித்த இளைஞர்;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த புகேழேந்தி என்ற இளைஞர் மது போதையில் கழுகுமலை சாலையில் சென்ற மினி பேருந்து மற்றும் லாரி ஆகியவற்றை மறித்து ரகளையில் ஈடுபட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. மேலும் மது போதையில் சாலையில் வாகனங்களை மறித்து உரண்டும், படுத்தும் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை பாடி ரகளையில் ஈடுபட்டது . உடனே சங்கரன்கோவில் போலீசார் வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.