ஜெயங்கொண்டம் அருகே மகள் உறவு முறை உள்ள சிறுமியை கர்ப்பம் ஆக்கிய கூலி தொழிலாளி போக்சோவில் கைது.

ஜெயங்கொண்டம் அருகே மகள் உறவு முறையான சிறுமியை கர்ப்பமாக்கி தாயாக்கிய கூலி தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்*;

Update: 2025-06-26 03:03 GMT
அரியலூர், ஜூன்.26- ஜெயங்கொண்டம் அருகே மகள் உறவு முறையான சிறுமியை கர்ப்பமாக்கி தாயாக்கிய கூலி தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்* கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள சி.அரசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் இவர் கூலி வேலை செய்து வருகிறார் இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஜெய்சங்கர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள துளாரங்குறிச்சி பகுதிக்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது திருமணமாகி கணவனால் கைவிடப்பட்ட பெண்ணுடன் கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணிற்கும் ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளது. இந்நிலையில் ஜெய்சங்கர் துளாரங்குறிச்சியிலேயே கள்ள தொடர்பு ஏற்பட்ட பெண்ணுடன் குடும்பம் நடத்திய நிலையில் அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்துள்ளது. இந்நிலையில் கள்ள தொடர்பில் இருந்த பெண் கூலி வேலைக்காக வெளியில் சென்ற போது வீட்டில் தனியாக இருந்த கள்ளத்தொடர்பில் இருந்த பெண்ணின் மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமடைந்த நிலையில் பிரசவத்திற்காக ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது மருத்துவர்கள் ஆவணத்திற்காக பெயர் மற்றும் முகவரியை பதிவு செய்யும்போது 18 வயது நிரம்பாத சிறுமி என்பது தெரிய வந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான ஜெய்சங்கரை தேடி வந்தனர். ஜெய்சங்கர் தங்கி இருக்கும் இடம் குறித்து ரகசிய தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெய்சங்கரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மகள் உறவு முறையிலான சிறுமியை கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Similar News