சாலையோர கிணறுக்கு தடுப்பு சுவர் கட்டும் பணி

சாலையோர கிணறுக்கு தடுப்பு சுவர் கட்டும் பணி நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை;

Update: 2025-06-26 04:22 GMT
முத்தூர் காங்கயம் பிரதான சாலையில் அமராவதிபாளையம் பிரிவு எதிர் புறம் சாலையோரத்தில் திறந்த நிலையில் கிணறு ஒன்று உள்ளது. இந்த சாலையின் வழியாக தினந்தோறும் பல்லடம், கோவை, கேரள மாநிலம், திருப்பூர், மேட்டுப்பாளையம், அன்னூர், நீலகிரி, கொடுமுடி, கரூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகை, நாமக்கல் உள்பட பல்வேறு நகர பகுதிகளுக்கு கனரக, இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த சாலையோர அபாய கிணறுக்கு உடனடியாக தடுப்பு சுவர் கட்ட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து வெள்ளகோவில் கோட்ட நெடுஞ் சாலை துறை மூலம் சாலையோர கிணறுக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் தடுப்பு சுவர் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணிகளை வெள்ளகோவில் கோட்ட நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் சத்ய பிரபா ஆகியோர் பார்வையிட்டு கள ஆய்வு செய்தனர்.

Similar News