கோவை: மாநகராட்சியை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாநகராட்சி வீட்டு வரி, குப்பை வரி, குடிநீர் கட்டண உயர்வை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2025-06-26 04:23 GMT
கோவை மாநகராட்சி வீட்டு வரி, குப்பை வரி, குடிநீர் கட்டண உயர்வை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 150 பேர் பங்கேற்று, ஆண்டுக்கு 6% வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், அபராதம் விதிக்கக் கூடாது, பாதாள சாக்கடை உள்ளிட்ட திட்டங்களுக்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்க வேண்டும், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவும் வழங்கப்பட்டது.

Similar News