சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையை எம்எல்ஏ ஆய்வு

அரசு மருத்துவமனையை எம்எல்ஏ ஆய்வு;

Update: 2025-06-26 11:57 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் புற நோயாளிகளாகவும், 100க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா திடீரென ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள நோயாளிகளிடம் நிறை குறைகளை கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சிகள் சங்கரன்கோவில் திமுக நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் மருத்துவர்களும் கலந்து கொண்டனர்.

Similar News