புளியங்குடி அரசு மாதிரி பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு

அரசு மாதிரி பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு;

Update: 2025-06-27 00:55 GMT
தென்காசி மாவட்டம் புளியங்குடி அரசு மாதிரி பள்ளியில் தரமற்ற முட்டை வழங்கப்பட்டதாக கூறப்பட்ட புகாரை அடுத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். இப்பள்ளியில் வழங்கப்பட்ட முட்டை அழுகிய நிலையில் இருந்ததாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இதைத் தொடா்ந்து வட்டார உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் வெங்கடேஷ், பள்ளியில் ஆய்வு மேற்கொண்டாா். மாணவா்களுக்காக அவிக்கப்பட்ட முட்டை தரமற்ாக இருந்த நிலையில், அவை மாணவா்களுக்கு வழங்கப்படவில்லை. அவை உடனடியாக அழிக்கப்பட்டுவிட்டன. மீண்டும் புதிய முட்டைகள் அவிக்கப்பட்டு மாணவா்களுக்கு வழங்கப்பட்டன’ என ஆய்வுக்குப் பின் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் தெரிவித்தாா். இந்நிலையில் தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ரெஜினி, பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு ஆசிரியா்கள், மாணவா்களிடம் விசாரணை மேற்கொண்டாா். மேலும் உணவு தயாரிக்கும் இடங்களையும் அவா் பாா்வையிட்டாா். முதன்மை கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் கண்ணன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

Similar News