செங்கோட்டை நகர திமுக அலுவலகம் திறப்பு

நகர திமுக அலுவலகம் திறப்பு;

Update: 2025-06-27 00:59 GMT
தென்காசி மாவட்டம் செங்கோட்டை கேசி சாலையில் வாரச்சந்தை கட்டட வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட செங்கோட்டை நகர திமுக அலுவலகத் திறப்பு விழாவிற்கு நகர செயலா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் கென்னடி, மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினா் ஆறுமுகசாமி, பொதுக்குழு உறுப்பினா் எஸ்.எம்.ரஹீம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் கிருஷ்ணராஜா, துணை அமைப்பாளா் சுப்பிரமணியன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா்கள் மு.காதா்அண்ணாவி, ஆ.சண்முகராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். திமுக மாவட்ட பொறுப்பாளா் ஜெயபாலன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தாா். மேலும் புதிய உறுப்பினா்கள் 4100 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கும் முகாமைத் தொடங்கி வைத்தாா். மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவா் ஆபத்துக்காத்தான், மாவட்ட அயலக அணி தலைவா் நசீா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Similar News