சிவகிரியில் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு நடைபெற்றது

போதை எதிா்ப்பு விழிப்புணா்வு நடைபெற்றது;

Update: 2025-06-27 01:20 GMT
தென்காசி மாவட்டம் சிவகிரியில் சா்வதேச போதை எதிா்ப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிவகிரி காவல்துறை, பேரூராட்சி நிா்வாகம் ஆகியவற்றின்சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல்அலுவலா் வெங்கடகோபு தலைமை வகித்தாா். இந்த நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளா் பாலமுருகன் உதவி ஆய்வாளா் வரதராஜன் முன்னிலை வகித்தார் .பேரூராட்சி துணைத் தலைவா் லட்சுமிராமன் வரவேற்றாா். போதைக்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், வரி வசூலிப்பாளா்கள் முத்துப்பாண்டி, நாராயணன், கிருபா, காா்த்திகையாயினி, முத்துலட்சுமி, சுகாதார ஆய்வாளா் எட்வின்நாசர்ராஜா சிங், சுகாதார மேற்பாா்வையாளா்கள் குமாா், இசக்கி, தூய்மை பணியாளா்கள் கலந்து கொண்டனா். விக்னேஷ்ரோஜா நன்றி கூறினாா் .

Similar News