கோவை: உழவர் தின பேரணிக்கான ஆலோசனை கூட்டம் !
கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியம் செங்கத்துறை மொண்டி தோட்டத்தில் உழவர் தின பேரணிக்கான முன் திட்டமிடல் ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.;
கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியம் செங்கத்துறை மொண்டி தோட்டத்தில் நேற்று உழவர் தின பேரணிக்கான முன் திட்டமிடல் ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி ஆகியவற்றின் ஏற்பாட்டில் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முன்னணி விவசாயிகள் பங்கேற்று, பேரணியின் அமைப்பு, ஏற்பாடுகள் மற்றும் பிரச்சார வேலைகளைப் பற்றிய விவாதங்களில் ஈடுபட்டனர். உழவர்களின் உரிமைகள், கோரிக்கைகள் மற்றும் எதிர்கால நிலைமை தொடர்பான கருத்துகள் இந்த கூட்டத்தில் வெளிப்படுத்தப்பட்டன. பேரணியை வெற்றிகரமாக நடத்த அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதையும் கூட்டத்தில் உரையாற்றியோர் வலியுறுத்தினர்.