வால்பாறையில் சிறுத்தை தாக்கி சிறுமி பலி – வனத்துறையின் கூண்டில் சிக்கியது சிறுத்தை!

சிறுமையை தாக்கிய சிறுத்தையை பிடிக்க வனத்துறை வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது.;

Update: 2025-06-27 03:21 GMT
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வால்பாறை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை குடியிருப்பு பகுதியில் நுழைந்த சிறுத்தை, 7 வயது சிறுமி ரோஷினி குமாரியை தாக்கி இழுத்துச் சென்றது. தீவிர தேடுதல் நடத்தப்பட்ட நிலையில், அடுத்த நாள் காலை சிறுமியின் சடலம் வனப்பகுதியில் மீட்கப்பட்டது. ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோன் முண்டா – மோனிகா தேவி தம்பதியின் மகளான ரோஷினி, குடிநீர் குழாயின் அருகே நின்றபோது, தேயிலை தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென தாக்கியது. சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை மற்றும் போலீசார், மோப்ப நாய்கள் மற்றும் டிரோன்கள் உதவியுடன் தேடுதல் மேற்கொண்டனர். இறுதியில், தேயிலை தோட்டத்திலிருந்து சுமார் 700 மீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கூண்டுகளை அமைத்து, கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இன்று அந்த சிறுத்தை ஒன்றில் சிக்கியது. கடந்த ஆண்டு அக்டோபரில் இதே பகுதியில் மற்றொரு ஜார்க்கண்ட் சிறுமி அப்சரா (6) சிறுத்தை தாக்கி உயிரிழந்த சம்பவமும், தற்போது நடைபெற்ற இரண்டாவது சம்பவமாகும். தொடர்ந்து ஏற்பட்டுள்ள இந்தச் சோக நிகழ்வுகள், தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது சிறுத்தை பிடித்தது அப்பகுதி மக்களிடம் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News