கோவை குற்றாலம் சுற்றுலா தடை நீடிப்பு: வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்கள் செல்ல தடை!
கோவை குற்றாலத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு கடந்த மே 30 முதல் தடை விதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து தடை நீடிக்கும் என அறிவிப்பு.;
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால், கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கடந்த மே 30 ஆம் தேதி விதிக்கப்பட்ட சுற்றுலா தடை தொடரும் என வனத்துறை தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் அறிவித்துள்ளதால், நிலைமை சீராகும் வரை சுற்றுலா அனுமதி வழங்கப்படாது. பின்னர் நிலைமையை மதிப்பீடு செய்து தீர்மானிக்கப்படும் என போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் கூறியுள்ளார்.