தென்காசியில் உள்ள குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி
குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி;
தென்காசி மாவட்டம் குற்றாலம் மலைப் பகுதியில் பெய்து வந்த தொடர்மழை காரணமாக அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து மூன்று நாட்களாக இந்த தடை நீடிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலையில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலி அருவி ஆகிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.