கோவை நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல்

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த மாதம் தொடங்கி பெய்து வரும் கனமழையால், நொய்யல் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.;

Update: 2025-06-27 07:23 GMT
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த மாதம் தொடங்கி பெய்து வரும் கனமழையால், நொய்யல் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் நீரோடை வழியாக வெள்ள நீர் பரந்து ஓடுவதால், நொய்யல் ஆற்றின் கிளை வாய்க்கால்கள் மூலம் பல குளங்களில் நீர் சென்று, தற்போது கோவையின் பெரும்பாலான குளங்கள் நிரம்பியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில், சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதியில் 48 மி.மீ., அடிவாரப் பகுதியில் 60 மி.மீ., தொண்டாமுத்தூரில் 36 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதன் விளைவாக, நொய்யல் ஆற்றின் முதன்மையான சித்திரைச்சாவடி தடுப்பணையில், வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது. மழை தொடரும் சூழ்நிலையில், நொய்யல் ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், கோவைக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையில்லாமல் ஆற்றுப் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News