சங்கரன்கோவில் அருகே முதியவர் பாத்ரூமில் வழுக்கி விழுந்து பலி
முதியவர் பாத்ரூமில் வழுக்கி விழுந்து பலி;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள வீரனாபுரம் கிராமத்தை சேர்ந்த தன்னாசி (65) என்ற முதியவர் வீட்டு பாத்ரூமில் குளிக்க சென்று போது எதிர்பாரவிதமாக வழுகி விழுந்து படுகாயம் ஏற்பட்டது. இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் முதியவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அங்கு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.