தென்காசியில் தேசியத் திறனாய்வு தேர்வுக்கான புத்தகங்கள் வழங்கல்
தேசியத் திறனாய்வு தேர்வுக்கான புத்தகங்கள் வழங்கல்;
தேசிய திறனாய்வு தேர்வுக்கான புத்தகங்கள் வழங்கும் விழா தென்காசி சி.எம்.எஸ். நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு தென்காசி வட்டாரக் கல்வி அலுவலர் செல்வ பாக்கிய சாந்தினி தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி வட்டாரக் கல்வி அலுவலர் வசந்தி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் இராஜதுரை வரவேற்புரை ஆற்றினார். தேர்வுக்கான புத்தகங்களை ஆர்.வி. நல்ல பெருமாள் அறக்கட்டளை சார்பில் கடையம் வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன் வழங்கினார். இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களும் கலந்து கொண்டனர்.