சங்கரன்கோவிலில் நாளை த.வெ.க கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
நாளை த.வெ.க கொள்கை விளக்க பொதுக்கூட்டம்;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுரண்டை சாலையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நாளை (ஜீன்.29) மாலை தலைவர் விஜய் பிறந்த நாள் விழா மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மாரியப்பன் தெரிவித்துள்ளார். மேலும் இதில் தமிழக வெற்றி கழக பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் ஒன்றிய செயலாளர், நகரச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.