குமரி மாவட்டம் கொல்லங்கோடு நகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்தும், லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டும், கொல்லங்கோடு நகராட்சியில் பல மடங்காக உயர்த்தப்பட்டுள்ள வரிகளை குறைத்திட கேட்டும், மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் வாழ்வாதார கோரிக்கை மாநாடு நடைபெற உள்ளது. இதன் முன்னோடியாக சி.பி.ஐ.எம் கொல்லங்கோடு வட்டார குழு சார்பில் நடை பயணம் கண்ணநாகம் சந்திப்பில் இருந்து நேற்று துவங்கியது. வட்டாரச் செயலாளர் டி எஸ் அஜித் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. விஜயமோகனன் துவக்கி வைத்து பேசினார். இந்த நிகழ்ச்சிக்கு வட்டாரக்குழு உறுப்பினர்கள் பி .சுனில் குமார், வி .எஸ். சனல்குமார், பி.அஜித் குமார், பி. கிறிஸ்துதாஸ், ஆர் சுந்தர்ராஜ், எஸ். மேரி தாசன், ஏ. பிராங்கிளின், பி.சுரேஷ், கே. ஸ்டீபன், எம். மஞ்சு, எஸ்.ஷிபிலா, எச் சரோஜினி, வாலிபர் சங்கம் வட்டாரச் செயலாளர் ஜி. ரமேஷ் மற்றும் கிளை செயலாளர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். இன்று 28-ம் தேதி அடைக்கா குழியில் நிறைவடைகிறது.